சீமான் எங்கள் பார்டனர்! போட்டுடைத்த தமிழிசை சவுந்தரராஜன்!!

தந்தை பெரியார் குறித்து சீமான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தமிழ்நாட்டு அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. இதை கண்டித்து பெரியார் ஆதரவாளர்களும் ஆதரித்து பெரியார் எதிர்ப்பாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர், பாஜக தலைவர்கள் எச் ராஜா, நண்பர் சீமான் என்றும் அண்ணாமலை, அண்ணன் சீமான் என்றும் வாஞ்சையுடன் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்போது தமிழிசை சவுந்தரராஜன் சீமான் எங்கள் தீம் பார்ட்னர், அதாவது கொள்கைக் கூட்டாளி என்று கூறியுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “ நாங்கள் இவ்வளவு நாட்களாக எதைப் பேசி வந்தோமோ அதை ஏற்கும் விதமாக சீமான பேசியுள்ளார். இதை எங்களுக்குப் பலமாகவும் ஆதரவாகவும் பார்க்கிறோம். இது பாஜகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இது அண்ணா வளர்த்த தமிழ் கிடையாது, ஆண்டாள் வளர்த்த தமிழ். இது பெரியார் வளர்த்த தமிழ் அல்ல. பெரியாழ்வார் வளர்த்த தமிழ் என்று நான் அடிக்கடி கூட்டத்தில் பேசியிருக்கிறேன். அதைப் போல் நாங்கள் பெரிய புராணம் படிக்கும் போது உங்களுக்குப் பிடிக்கவில்லை. பெரியார் புராணம் புடிக்குதா என்று கேட்டார். நாங்கள் என்ன சொன்னமோ அதை அவர் தொடர்வது எங்களுக்கு மகிழ்ச்சி.
ஆனால் சீமான் இப்படிப் பேசும் போது அவரை பாஜகவின் ஏ டீம், பி டீம், இசட் டீம் வரைக்கும் கொண்டு சேர்க்கிறீர்கள். இதற்காக சீமானை எங்கள் டீம் என்று கூற முடியாது. வேண்டுமானால் தீம் பார்ட்னர் என்று சொல்லலாம்” என்று கூறியுள்ளார்.
தீம் பார்ட்னர் என்பதற்கு கொள்கை கூட்டாளி என்று அர்த்தம் கொள்ளலாம். சீமான் பாஜகவின் பார்ட்னர் என்று கூறியிருப்பது நாம் தமிழர் கட்சியினரிடையேஅதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.