சீமான் மீது பாலியல் குற்றச்சாட்டு! சென்னையில் பரபரப்பை கிளப்பும் போஸ்டர்!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 2011ம் ஆண்டு கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிமன்றத்தின் உத்தரவின் படி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். பெங்களூரு சென்று நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை செய்த போலீசார், சென்னையில் சீமானிடம் நேரில் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விஜயலட்சுமி விருப்பத்தின் பெயரில் பணம் பெற்றுக் கொண்டு உறவு கொண்டார் என்ற ரீதியில் பாலியல் தொழிலாளி என்ற குற்றச்சாட்டை சுமத்தினார் சீமான். இதற்கு கண்ணீர் மல்க நானா விபச்சாரி என்று சாபம் விட்டிருந்தார் விஜயலட்சுமி. தந்தை பெரியாரை தொடர்ந்து இழிவாகப் பேசிவரும் சீமானை, பெரியார் இயக்க்கங்கள் விஜயலட்சுமி விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
சென்னையில் திராவிடர் பெரியார் கழகம் சார்பில், தமிழ்நாடு அரசே, காவல் துறையே, பாலியல் குற்றவாளி சீமானை தப்ப விடாதே” என்ற கோரிக்கையுடன் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டுள்ளது. உதவி கேட்டு வந்த பெண்ணை ஏமாற்றி வன்புணர்ந்து 7 முறை கருக்கலைப்பு செய்த பாலியல் குற்றவாளி சீமானை கடுமையான சட்டத்தில் கைது செய், சிறையிலடை என்ற வாசகமும் அதில் இடம்பெற்றுள்ளது.