சங்க கால தமிழர்கள் வாழ்வியலை நிறுவிய அறிவியல் சான்றுகள்!! முதலமைச்சர் பெருமிதம்!!

 
Keeladi Men

சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட தகவல்கள் அறிவியல் மூலம் நிறுவப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழ்வியல் அறிவியல் வழி நிறுவப்பட்ட சான்றாக கீழடியில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழ்வாராய்ச்சியில் கொந்தகை பகுதியில் கிடைக்கப்பட்ட மனித மண்டை ஓடுகளுக்கு முப்பரிமாண முறையில்  தென்னிந்தியர்களின் மரபணுபு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு முகம் வடிவமைத்துள்ளது இங்கிலாந்து ஆய்வு நிறுவனம்.

இது தொடர்பான தகவல்களை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் எக்ஸ்க்ளூசிவாக வெளியிட்டுள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின் எக்ஸ் தள பதிவுக்கு பதிலளித்து மறு பதிவு செய்துள்ள முதலமைச்சர் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில இதழுக்கு நன்றி தெரிவித்ததுடன் “சங்க இலக்கியம் சொற்களால் வடித்த வாழ்வியல் எல்லாம் அறிவியல்வழி நிறுவப்பட்ட சான்றாகக கீழடியில்!” என்று குறிப்பிட்டுள்ளார் 


கீழடி ஆய்வு அறிக்கையை ஒன்றிய அரசு திருப்பி அனுப்பியுள்ள நிலையில், இங்கிலாந்து நிறுவனத்தின் கீழடி மனிதர்களின் முகங்கள் வெளியீடும், ஆங்கில கட்டுரையும் வட இந்தியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சரஸ்வதி நாகரீகத்தில் இப்படி ஏதாவது ஒரு சான்றைக் காட்ட முடியுமா என்ற கேள்விகளும் சமூகத்தளங்களில் கேட்கப்பட்டு வருகிறது.

From around the web