பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. முதன்மை கல்வி அலுவலகம் அறிவிப்பு!

 
Leave

செங்கல்பட்டு மாட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை (நவ. 25) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு வருகின்றனர்.

Rain

இந்த நிலையில் செங்கல்பட்டு, சென்னை ஆகிய பகுதிகளில் நாளை பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வானிலை அறிக்கையின்படி நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ள காரணத்தால் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சி தலைவரின் அறிவுறுத்தலின் பேரில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் 25.11.2023 அன்று செயல்படாது.

chengalpatu

எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

From around the web