வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

வேதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற இருப்பதால், வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (பிப்.20) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்த தலம். மேலும், பூஜை செய்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவாரம் பாடி திறந்ததாக வரலாற்று கூறும் சிறப்புமிக்க கோவிலாக திகழ்கிறது.

vedaranyam

இத்தகைய சிறப்பு வாய்ந்த வேதாரண்யேஸ்வரர் கோவில் ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நாளை (பிப். 20) நடைபெறுகிறது. எனவே அன்றைய தினம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் அருள்மிகு ஸ்ரீதியாகராஜர் சுவாமிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெறும். விழா நாட்களில் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்று வருகிறது.

Local-holiday

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜசாமி தேரில் எழுந்தருள உள்ளார். இதைத்தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதனால் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் மட்டும் உள்ளுறை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

From around the web