தமிழ்நாட்டில் நாளை குரூப்-2 தேர்வு.. பள்ளிகளுக்கு விடுமுறை.. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 
Leave

தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு நாளை (செப். 14) விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாளை (செப். 14) குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. குரூப் 2 மற்றும் 2ஏ தோ்வை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 போ் நாளை (சனிக்கிழமை) எழுத உள்ளனா். இதற்காக தமிழ்நாடு முழுவதும் 2,763 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள 2,763 தோ்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளா்கள், கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

TNPSC

தோ்வா்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களுக்குள் நாளை காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். 9 மணி வரை அவா்கள் வருவதற்கு அனுமதி உண்டு என அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் நாளை குரூப் -2 தேர்வு நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் பல பள்ளிகள் தேர்வு மையங்களாக செயல்பட்டு வருகிறது. எனவே அந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

leave

இந்நிலையில், நாளை (14.09.2024) தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றமும் பரிந்துரை செய்திருந்தது. மேலும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், குரூப் -2 தேர்வு மையங்களாக செயல்படும் பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (செப். 14) விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

From around the web