வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
Leave

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது பிறந்த நாளை முன்னிட்டும், 61-வது குருபூஜையை முன்னிட்டும் வருகின்ற 28-ந்தேதி முதல் 30-ம்தேதி வரை தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா நடைபெறுகிறது.

Devar

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் தென் மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Local-holiday

அதன்படி, சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி, காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் வருகிற 30-ம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web