நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

 
School-leave

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை பாதிப்புகள் குறையாத நிலையில், சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. இதையடுத்து, ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் கடல் போல் தேங்கி உள்ளது. குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளில் பெரும்பான்மையான இடங்களில் மழை நீர் இடுப்பளவு தேங்கியுள்ளது.

leave

பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்தாலும் இன்னும் பல இடங்களில் மழை நீர் துளிகூடா வற்றாத நிலையும் காணப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்களை படகு மூலம் மீட்கும் பணி தீவிரமடைந்து வருகிறது. இதனால் தொடர்ந்து இன்று 3வது நாளாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இன்னும் மழை பாதிப்புகள் குறையாததால் நாளையும் சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

From around the web