நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை (ஜன. 30) உள்ளூர்  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரின் ஆராதனை விழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 177-வது ஆராதனை விழா கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 26) மாலை 5 மணிக்கு தேசூர் செல்வரத்தினம் குழவினரின் மங்கள இசையுடன் தொடங்கியது. தொடர்ந்து மாலை  6 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது.

Thiyagarajar

நான்காம் நாளான இன்று (ஜன. 29) மாலை 6.40 மணிக்கு திருப்பாம்புரம் சகோதரர்கள் மீனாட்சிசுந்தரம், சேஷகோபாலன் ஆகியோர் நாதஸ்வர நிகழ்ச்சி நடக்கிறது. இரவு திரைப்பட பின்னணி பாடகி மகதி, சுதா ரகுநாதன், காயத்திரி கிரிஷ் ஆகியோர் பாடுகிறார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் நாள் 30-ம் தேதி காலை 8.30 மணிக்கு மங்கள இசை நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து 9 மணிக்கு விழா பந்தலில் ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள், பாடகர்கள் கலந்து கொண்டு ஒரே குரலில் பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்துகிறார்கள். இரவு 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லகில் தியாகராஜர் வீதி உலா காட்சி நடைபெறுகிறது. இரவு 8.20 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகி நித்யஸ்ரீ மகாதேவன் பாடுகிறார். இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Local-holiday

இந்த நிலையில், தியாகராஜர் ஆராதனை விழாவையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு நாளை (ஜனவரி 30) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 10-ம் தேதி பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்‌.

From around the web