வரும் 26-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
leave

பண்ணாரி மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு வரும் 26-ம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குண்டத்தில் இறங்கி தீ மிதிப்பார்கள்.

Erode

இந்த ஆண்டு திருவிழா கடந்த 11-ம் தேதி பூச்சாற்றுடன் தொடங்கியது. கடந்த 19-ம் தேதி கம்பம் சாட்டுதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Local-holiday

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்தியில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் வருகிற 26-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு குண்டத்தில் பக்தர்கள் இறங்கி தீ மிதிக்கும் விழா நடைபெற உள்ளது. இதன் காரணமாக 26-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி பள்ளி, கல்லூரி தேர்வுகள் நடைபெறும் என்றும், உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 30-ம் தேதி பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web