வரும் 24-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

 
Leave

முத்துப்பேட்டை ஜாம்புவான் ஓடை தர்காவில் கந்தூரி விழாவை முன்னிட்டு வரும் 24-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டம் வீரன்வயல் கிராமத்தில் புகழ்பெற்ற ஜம்புவான் ஓடை தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 14 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை காண்பதற்காக தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஜாதி மத வேறுபாடு இன்றி ஆயிரக்கணக்கானோர் வருகை தருவது வழக்கம்.

muthupet

அந்த வகையில் இந்தாண்டு 14.11.2023 முதல் 27.11.2023 வரை 14 தினங்கள் ஜாம்புவானோடை தர்ஹா பெரியகந்தூரி விழா தர்ஹாவின் பாரம்பரியமிக்க கண்ணியத்துடன் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு விழா நவம்பர் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

Local-holiday

இந்த நிலையில் அன்றைய தினம் ஆயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள் என்பதால் திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ அறிவித்துள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் எனவும் அறிவித்துள்ளார்.

News Hub
ஆதாரத்தைக் காட்டுங்க! சீமான் வீட்டுக்குப் படையெடுக்கும் பெரியார் தொண்டர்கள்!!