வரும் 23-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
Leave

சங்கரன்கோவில் அமைந்துள்ள சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு வரும் 23-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அமைந்துள்ள சங்கரநாராயண சுவாமி கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதன் பிறகு 2020-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் கொரோனா தொற்று மற்றும் திருப்பணி வேலைகள் காரணமாக, குடமுழுக்கு விழா தள்ளிப்போனது. அதைத் தொடா்ந்து குடமுழுக்கு நடத்த பக்தா்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2023-ம் ஆண்டு திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டன. 9 நிலைகள் கொண்ட 125 அடி உயர ராஜகோபுரம், கோமதி அம்பாள், சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி கோபுரங்களுக்கு வண்ணம் தீட்டும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இதைத் தொடா்ந்து ஜூலை 1-ம் தேதி நடைபெற்ற அறங்காவலா் குழு ஆலோசனைக் கூட்டத்தில், ஆகஸ்ட் 23-ம் தேதி குடமுழுக்கு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. முன்னதாக யாகசாலை பூஜைகள் ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 4.30 மணியளவில் தொடங்கியது. 

Sankarankoil

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி திருக்கோவில் குடமுழுக்கு விழா 23.08.2024 (வெள்ளி) அன்று நடைபெற இருப்பதால் அரசாணையின் படி வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் நடைபெற்று வரும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கு, நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

Local-holiday

இந்த நாளில் அரசு தேர்வுகள் ஏதுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது. மேலும் உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiabel Instrument Act 1881) ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது.

இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைகொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் (21.09.2024) சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப்படுறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web