நாளை டிசம்பர் 3ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எந்தெந்த மாவட்டங்கள்?
ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவில் பலர் உயிரிழந்துள்ளனர். பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடுக்கி விட்டுள்ளார்.
மழை தொடரும் வாய்ப்புள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை டிசம்பர் 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை ஆகும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (செவ்வாய்கிழமை) விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.