பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
School

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள் நாளை செயல்படுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

இந்துகளின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தீபாவளி. கடந்த அக்டோபர் 31-ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகை அன்று பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊருக்குச் சென்று தங்கள் உறவினர்களுடன் கோலாகலமாகக் கொண்டாடுவார்கள். அந்த வகையில் சென்னையில் இருந்து மட்டும் லட்சக்கணக்கில் மக்கள் சொந்த ஊர்களுக்குப் பயணமாகினர்.

இதற்கிடையே, இந்த முறை தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை வந்தது. இதனால் ஒரு நாள் விடுமுறை போதாது என்பதால் நவம்பர் 1-ம் தேதி வெள்ளிக்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.

Diwali

அதனை ஏற்று நவம்பர் 1-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவித்தது தமிழ்நாடு அரசு. அன்றைய தினத்தில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் வீடு திரும்ப ஏதுவாக இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகத் தெரிவித்த தமிழ்நாடு அரசு, அன்றைய தினத்துக்குப் பதிலாக நவம்பர் 9-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கவும் செய்தது.

இந்தநிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் நாளை (09-11-2024) செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு மறு நாள் விடுமுறை விடப்பட்ட நிலையில் அதனை ஈடுசெய்ய நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN-Govt

அனைத்து, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மாநகராட்சி பள்ளிகள் நாளை (நவ. 9) முழு நேரம் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் நாளை  (நவ. 9) பள்ளிகள் முழுநேரம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web