ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
leave

ஆடி கிருத்திகையை முன்னிட்டு இன்று (ஜூலை 29) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாக இந்த கோவில் திகழ்கின்றது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகின்றனர். 

Tiruttani

ஆடிக்கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாக கூறப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஆடி கிருத்திகையும் ஒன்று. முக்கியமாக திருத்தணியில் ஆடிக்கிருத்திகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

Local-holiday

இந்த ஆண்டு ஆடி கிருத்திகை இன்று (ஜூலை 29) கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

From around the web