பள்ளி ஆசிரியர்கள் சுடிதார் அணியலாம்.. பெண் ஆசிரியர்களுக்கு சூப்பர் அறிவிப்பு!

 
Teacher

பெண் ஆசிரியர்கள் தங்கள் விருப்பப்படி விதிகளுக்கு உட்பட்டு புடவை அல்லது சுடிதார் அணியலாம் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

கற்பித்தலில் புதுமையை புகுத்தியும் மற்றும் தொழில் நுட்ப திறனை பயன்படுத்தி கற்பித்தலை செய்யும் ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களின் கல்வித்திறன் மற்றும் கற்பித்தல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் கனவு ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 380 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Anbil Mahesh

இந்த விருது வழங்கும் விழா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் இன்று (டிச. 19) நடைபெற்றது. இதில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில் பேசிய அவர் ஆசிரியர் இல்லை என்றால் இன்று மேடையில் நாங்கள் இல்லை, நீங்கள் இல்லை என்றால் சமுதாயத்தில் சிறந்து விளங்கிட இயலாது எனக் கூறினார். மேலும் பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் மற்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளிகளில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தங்களின் விருப்பப்படி புடவை மற்றும் சுடிதார் அணியலாம் என தெரிவித்தார்.

Chudithar

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ந.லதா, விவேகானந்தா கல்வி நிறுவன தாளாளர் மு.கருணாநிதி உட்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

From around the web