சத்யராஜ் மகளுக்கு திமுகவில் பொறுப்பு!!
Feb 16, 2025, 10:27 IST

திமுகவில் சேர்ந்துள்ள நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவுக்கு திமுகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் திவ்யா சத்யராஜ்.
ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா, திமுக அரசு குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் பெண்களின் மேம்பாட்டுக்காகவும் திமுக ஆட்சியில் தொடர்ந்து நல்ல திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறார்கள். அதனால் திமுகவில் சேர்ந்தேன் என்று கூறியிருந்தார்.
தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திவ்யா சத்யராஜுக்கு சமூகத்தளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.