சாடிஸ்ட் பாஜக அரசு.. ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம்!!!

 
modi stalin

சமையல்வாயு விலை 50 ரூபாய் அதிகரித்துள்ளதை கடுமையாகக் கண்டித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒன்றிய பாஜக அரசை சாடிஸ்ட் என்று கடுமையான சொற்களில் விமர்சித்துள்ளார்.

"நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா? "உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்" என்பது, #SadistBJP அரசுக்கு மிகவும் பொருந்தும்! உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல்வாயு சிலிண்டர் விலை உயர்வு அமைந்திருக்கிறது மக்களே…

அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது! ஒன்றிய பாஜக அரசே... தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக!" என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க,ஸ்டாலின்.


 

From around the web