பொழுதன்னிக்கும் புரளி கிளப்புறதையே பொழப்பா வச்சிருக்காங்களே! தகவல் சரிபார்ப்பகம் படு பிசி!!

 
Temple

தமிழ்நாடு முழுவதும் வாட்ஸ் அப் மற்றும் பிற சமூக ஊடகங்களில் நாள்தோறும் புதிது புதிதாக வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருவாக்கியுள்ள தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் இந்த வதந்திகளின் உண்மை நிலவரத்துடன் பொய்களை அம்பலப்படுத்தி வருகிறது. குறிப்பாக பாஜகவினர், கட்சித் தலைவர் முதல் அடிமட்டத் தொண்டன் வரை இந்த வதந்தி பரப்பும் வேலையை செவ்வனே செய்து வருகிறார்கள் என்பது தகவல் சரிபார்ப்பகத்தின் மூலம் அம்பலப்படுத்தப் படுகிறது.

இந்து அறநிலைத்துறையில் இஸ்லாமியர் என்று எச்.ராஜா ஒரு வதந்தியைப் பரப்பினார். அது உண்மையில்லை என்று தெரிவித்த பிறகும் எக்ஸ் தளத்தில் அந்தப் பதிவு அப்படியே இருக்கிறது. அதை நீக்கவோ அல்லது தவறுக்கு வருத்தம் தெரிவிக்கவோ இல்லை.

பாண்டியநாட்டு இளவரசி என்ற எக்ஸ் தள கணக்கில் “அதிக அளவில் ஆன்மீக ரீதியான வருமானம் வருவதும் இந்து கோயில்களில் தான்.... அதே மாதிரி... அதிக அளவில் கவனிப்பாரற்று சிதைந்து கொண்டிருப்பதும் இந்து கோவில்கள் தான்..” என்று ஒரு படத்துடன் பதிவு வெளியாகியிருந்தது.

இந்தப் படத்தின் உண்மைத் தன்மையை தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ளது. சிதிலமடைந்த கோயில்கள் என்று பரப்பப்படும் புதுப்பிக்கப்பட்ட கோயிலின் பழைய படங்கள் என்று குறிப்பிட்டு கோவில்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புதிய படங்களை வெளியிட்டுள்ளனர்.

என்னதான் அரசியல் என்றாலும் பொழுதன்னிக்கும் எப்படித்தான் இப்படி பொய்யா வதந்திகளை பரப்பும் மனசு இருக்கிறதோ? இவர்களுக்கெல்லாம் மனிதத் தன்மை குறைந்து போய்விட்டதா அல்லது ஏதாவது மனநலக் கோளாறா?