சட்டத்தின் ஆட்சி! தெய்வத்தின் சன்னதியில் முழங்கிய அமைச்சர் சேகர்பாபு!!
இந்து அறநிலைத்துறை அமைச்சர் அதிரடி நடவடிக்கைகளுக்கும், அதிரடியான பேட்டிகளுக்கும் பெயர் பெற்றவர். செயல் பாபு என்று என்று முதலமைச்சர் ஸ்டாலினால் பாராட்டு பெற்றவர். ஒவ்வொரு நாளும் ஒரு கோவிலில் இருப்பார் அல்லது வட சென்னையில் அரசு நிகழ்சியிலோ, கட்சி நிகழ்ச்சியிலோ சேகர் இருப்பார். கிட்டத்தட்ட நாள் தோறும் செய்தியாளர்களை சந்தித்து அன்றைய பரபரப்பான செய்திகளுக்கு விளக்கம் அளிக்கவும் செய்பவர் சேகர் பாபு.
நேற்று முன் தினம் திருச்செந்தூர் முருகன் கோவில் திருப்பணிகளை ஆய்வு செய்த் அமைச்சர் நேற்று சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்கு வந்திருந்தார். அங்கே செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது கோவில் வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர் மீதான குற்றச்சாட்டு பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளிக்கும் போது,
”திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரர் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவகாரம் ஏற்கனவே என் கவனத்திற்கு வந்தது. இந்த விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும். இது சட்டத்தின் ஆட்சி. தெய்வத்தின் சன்னிதானத்தில் அமர்ந்து சொல்கிறேன், இன்னார், இனியவர் என்று பார்க்காமல் தவறு செய்பவர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம். மக்கள் எங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் பிரச்சினைகளை குற்றமாக நினைக்கமாட்டோம். அவற்றை குறைகளாக கருதி நிச்சயம் சரி செய்வோம்” என்று இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறினார்..