இல்லத்தரசிகளுக்கு ரூ.1,000... முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

 
1,000

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளில் இருந்து குடும்பத்தலைவிக்கு ரூ. 1,000 வழங்கும் திட்டம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. தமிழ்நாடு பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்காக தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் ஆயிரம் மாதாந்திர உரிமைத் தொகை வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டம் வரும் பட்ஜெட்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.

DMK

பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். அந்தப் பணி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதாக கூறப்படுகிறது. பி.எச்.எச். என்ற வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பி.எச்.எச்.ஏ.ஏ.ஒய். என்ற அந்தியோதயா அன்னயோஜனா ரேஷன் அட்டைதாரர்களுக்கும் (அதாவது 35 கிலோ அரிசி வாங்குபவர்கள்) ரூ.1,000 கிடைக்கும்.

அதே நேரத்தில் இந்த திட்டத்தை பெறுவதில் வயது வரம்பு, கணவரின் ஆண்டு வருமானம் ஆகியவையும் கணக்கிடப்படும் என்று கூறப்படுகிறது.அரசு ஊழியர்கள் குடும்பத்துக்கு ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது. புதுமைப்பெண் திட்டத்தில் பயன் அடையும் கல்லூரி மாணவிகளின் தாயார் இந்த திட்டத்தில் பயன்பெற தடை எதுவும் இருக்காது என்று கூறப்படுகிறது.

1000-rupees-for-ration-card

60 வயதுக்கு மேற்பட்டோருக்கான முதியோர் உதவித்தொகை வழங்குவதிலும் இந்த திட்டம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. குடும்பத்தலைவிகளுக்குதான் உரிமைத் தொகை என்பதால், ரேஷன் அட்டையில் எதுவும் மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் வருமான வரி செலுத்துவோருக்கு இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்தில் இடம் பேரமாட்டார்கள் என கூறப்படுகிறது.

வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில்ம் இது குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. மேலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

From around the web