ரூ. 21,000 சம்பளம்.. காஞ்சிபுர மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் வேலை.. உடனே விண்ணப்பிங்க!

 
DHS

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் HMIS IT Coordinator, MLHP, Multipurpose Health Worker / Health Inspector Grade II போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பணியின் பெயர்: HMIS IT Coordinator, MLHP, Multipurpose Health Worker / Health Inspector Grade II, Radiographer, Lab Technician

காலி பணியிடங்கள்: 16

HMIS IT Coordinator - 1, District Programme cum Administrative Assistant - 1, MLHP - 3, Multipurpose Health Worker / Health Inspector Grade II - 3, Radiographer - 2, Lab Technician - 3, Hospital Worker - 1, Sanitary Worker - 1,
Multipurpose Hospital Worker - 1

jobs

கல்வி தகுதி:

இந்த தமிழ்நாடு அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

HMIS IT Coordinator - Diploma, B.Sc, BCA
District Programme cum Administrative Assistant - Graduate Degree
MLHP - GNM, B.Sc
Multipurpose Health Worker / Health Inspector Grade II - 12ம் வகுப்பு
Radiographer - B.Sc (Radiography)
Lab Technician - 12ம் வகுப்பு
Hospital Worker / Sanitary Worker / Multipurpose Hospital Worker - தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும்

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

சம்பளம்:

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.8,500 முதல் ரூ.21,000 வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

Application

தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழ்நாடு அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு (26.12.2023) அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.12.2023

From around the web