2 ஆயிரம் கோடி ரூபாய் கல்வி நிதி.. மீண்டும் மறுத்த தர்மேந்திர பிரதான்! 

 
Pradhan Pradhan

தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசு கடந்த நிதியாண்டிற்கு தர வேண்டிய கல்வி நிதியான 2 ஆயிரம் கோடி ரூபாயை மீண்டும் மறுத்துள்ளார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

சென்னை ஐ ஐ டி யில் நடந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளார்களை சந்திந்த தர்மேந்திர பிரதான் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த நிதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே கன்னடம், தெலுங்கு, மலையாள மொழிகள் கற்றுத்தரப்படுகிறது. ஒன்றிய அரசு எந்த மொழியையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இது அரசியல் சாசனசட்டத்திற்கு எதிரானது என்று தமிழ்நாடு அரசு ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்னும் நிலுவையில் இந்த வழக்கு உள்ளது.

தர்மேந்திர பிரதானின் இன்றைய பேச்சுக்கு உடனடியாக சூடான பதிலடி கொடுத்துள்ளார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப் பெருந்தகை. இது மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்று வலியுறுத்தியுள்ளார். 

இரு மொழி தமிழ்நாடு அரசின் கொள்கை மூன்றாவது மொழியும் கட்டாயம் என்பதைத் தானே தமிழ்நாடு அரசு ஏற்க மறுக்கிறது.

From around the web