சென்னையில் ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம்..? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன தகவல்

 
Udhayanidhi Stalin

சென்னையில் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதோடு மழை வெள்ளத்தால் பொதுமக்களின் வாகனங்கள், சான்றிதழ்கள், ஆவணங்கள், மின்சாதன பொருட்கள் உள்ளிட்ட உடைமைகளும் சேதமடைந்தன.

மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு அரசு, சென்னையில் ரேஷன் அட்டைகளை வைத்து இருப்பவர்களுக்கு தலா ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால், சென்னையை அல்லாதவர்களும் இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நிவாரணம் கிடைக்குமா..? என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Rain

இதனிடையே சென்னை அண்ணாநகர், திருவல்லிக்கேணி பகுதியில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சென்னையில் ரேஷன் கார்டுகள் இல்லாதவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் புகை குண்டு வீசப்பட்ட விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புகை குண்டு வீசியவர்கள் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி கொடுத்தவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி மீது நடவடிக்கை எடுத்திருப்பது ஜனநாயக படுகொலை என்று கூறினார்.

Token

மேலும் அவர், பிரதமர் மோடி நாடாளுமன்றம் வருவதற்கே ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டியுள்ளது. அவர் எப்பொழுதாவதுதான் நாடாளுமன்றம் வருகிறார். அதனால் பாதுகாப்பை விட்டு விட்டனர் போல என்று கூறினார்.

From around the web