வைகை அணையில் இருந்து நீர் திறப்பு.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

 
Vaigai

வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் பாசனத்திற்கு, நீர் திறக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், வட தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யகூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் இந்த  மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Rain

மேலும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக நீர்நிலைகள் நிறம்பி வழிகின்றன. இதன் காரணமாக விநாடிக்கு 3,000 கன அடி வீதம் வைகை ஆற்றின் வழியாக ராமநாதபுரத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. நாளை முதல் டிசம்பர் 19-ம் தேதி வரை வினாடிக்கு 2,500 கன அடி நீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

vaigai

இந்நிலையில் வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் பாசனத்திற்கு, நீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே 5 மாவட்டங்களை சேர்ந்த கரையோ மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

From around the web