செப்டம்பர் 18-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை.. சற்றுமுன் வெளியான அறிவிப்பு

 
Ration-Shop Ration-Shop

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18-ம் தேதி நியாய விலைக் கடைகள் இயங்காது என நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். தற்போது விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் 11 நாட்களே உள்ள நிலையில் விநாயகர் சிலைகள் தயார் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Vinayagar

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கான பொது விடுமுறையை செப்டம்பர் 17-ம் தேதியில் இருந்து, 18-ம் தேதிக்கு (திங்கட்கிழமை) மாற்றி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18ம் தேதி கொண்டாடப்படும் என இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு, பல்வேறு கோவில்களின் தலைமை தெரிவித்திருப்பதால் அன்றைய தினம் பொது விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Ration-Shop

அதனைத் தொடர்ந்து தற்போது செப்டம்பர் 18-ம் தேதி (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விடுமுறையையொட்டி தமிழ்நாட்டில் நியாய விலைக் கடைகள் செயல்படாது என்று நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

From around the web