ரஜினி பாணி அரசியலா? விஜய் கட்சியில் சேர்ந்த அரசியல் பிரபலங்கள்!!

 
Adhav vijay

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் பாஜகவிலிருந்து அதிமுகவில் சேர்ந்து ஐடி பிரிவில் பொறுப்பு வகித்து வந்த சி.டி.நிர்மல் குமார் மற்றும் வி.சி.கவில் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா இன்று சேர்ந்துள்ளனர். இருவருக்கும் முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ரஜினி காந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக சொன்ன போது, அரசியலிலிருந்து விலகியிருந்த தமிழருவி மணியனை கட்சியில் சேர்த்தார்.பின்னர் திடீரென்று பாஜகவிலிருந்து அர்ஜுன்மூர்த்தி என்பவர் ரஜினி கட்சியின் முக்கிய நிர்வாகியாக அறிவிக்கப்பட்டார். ரஜினி கட்சி தொடங்கப்போவதில்லை என்றதும் மீண்டும் பாஜகவுக்கே போய்விட்டார் அர்ஜுன்மூர்த்தி.

பாஜகவிலிருந்து அதிமுகவுக்குப் போய், தவெகவுக்கு வந்துள்ள நிர்மல் குமாரும், திமுகவில் எம்.பி. சீட் கேட்டு விசிகவுக்குப் போய்,  அங்கும் எம்.பி. சீட் கிடைக்காததால் திமுகவை வசை பாடி விசிகவிலிருந்து வெளியேறி தற்பொது விசிகவில் சேர்ந்துள்ள ஆதவ் அர்ஜுனா இருவரும் ரஜினி கட்சியில் இணைந்த அரசியல் பிரபலங்களை நினைவூட்டுவதாக உள்ளது. ஆனால் விஜய் கட்சி அறிவித்து வேலையைத் தொடங்கிவிட்டார்.அந்த வகையில் ரஜினியை மிஞ்சியவர் தான் விஜய். 

ஆனாலும் திரைத்துறையிலிருந்து விஜய் கட்சியில் முக்கிய நடிகர்கள், நடிகைகள் யாரும் சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகிய நடிகை வினோதினி தவெகவில் சேருவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

2026 தேர்தலில் ஆதவ் அர்ஜுனாவும் நிர்மல்குமாரும் தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆவார்களா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.

From around the web