ஒபிஎஸ் - ரஜினிகாந்த் சந்திப்பு! இரட்டை இலை விவகாரமாக இருக்குமோ?

 
OPS

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க்.ஸ்டாலினை அமைச்சர்கள் மற்றும் கட்சியின் எம்.பி.க்கள் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதே வேளையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சத்தமில்லாமல் போயஸ்கார்டன் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார்.

சந்திப்பு முடிந்து வரும் போது செய்தியாளர்கள் ஓ,பன்னீர்செல்வத்தை வழிமறித்து, ரஜினியிடம் அரசியல் பேசினீர்களா என கேள்விகளை அடுக்கினார்கள். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் ரஜினிகாந்த நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார் என்றும் ஓ.பி.எஸ் கூறினார்.

இரட்டை இலை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் ஓ.பி.எஸ்ஸின் நகர்வுகள் பல கேள்விகளை எழுப்புகிறது. புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை பிரதமர், உள்துறை அமைச்சருக்கு தனித்தனியே கடிதம் மூலம் அனுப்பியிருந்தார் ஓ.பி.எஸ். ரஜினிகாந்த் அரசியலிலிருந்து முற்றிலும் விலகிவிட்டாலும் பாஜக தலைவர்களிடம் நெருக்கமாகவே இருந்து வருகிறார். மோடி, அமித்ஷா மட்டுமல்லாமல் உ.பி, முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும் அளவுக்கு பாஜவுடன் இணக்கமானப் போக்கையே கடைப்பிடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

ரஜினி மூலம் பாஜக தலைவர்களுக்கு தூது ஏதும் சொல்வதற்காகவோ அல்லது ரஜினி மூலம் பாஜக தரப்பிலிருந்து தகவல் பெறுவதற்காகவோ இந்த சந்திப்பு ஏற்பட்டிருக்கலாமோ என்று அரசியல் நோக்கர்களின் பார்வையாகவும் இருக்கிறது. ரஜினிக்கும் ஓ.பி.எஸ்க்கும் இடையே இதற்கு முன்னால் வெளிப்படையான நட்பு ரீதியிலான சந்திப்பு ஏற்பட்டது கிடையாது. புத்தாண்டு வாழ்த்து என்ற வாய்ப்புடன் நடந்திருக்கும் இந்த சந்திப்பின் பின்னால் அரசியல் விவகாரம் இருக்க வாய்ப்பு இருக்கும் என்றே நம்பப்படுகிறது.

அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகள் ஒ.பி.எஸ் - ரஜினி சந்திப்புக்கான உண்மையான காரணத்தை வெளிப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கலாம்

From around the web