தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

 
Rain

தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Rain-Report

இந்த நிலையில், தமிழ்நாட்டின் 13 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Rain

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

From around the web