தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அலெர்ட்!

 
Rain-Report

தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பகல் நேரத்தில் மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. எனினும், சில இடங்களில் மிதமான மழை பெய்து சற்று வெப்பத்தை தணித்து வருகிறது.

Rain

மன்னார் வளைகுடா பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஏப்ரல் 16) தென் தமிழ்நாடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாடு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain

அதன்படி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web