தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை... வானிலை மையம் அலர்ட்!!

 
Rain

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (மே 7), நாளையும் (மே 8) பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Rain-Report

இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி,நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Storm

இதனிடையே தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது, வரும் செவ்வாய்க்கிழமை அன்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web