அனுமதியின்றி போராட்டம்... அண்ணாமலை, தமிழிசை மீது வழக்குப் பதிவு!

 
Annamalai Annamalai

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டிய பாஜக தலைவர் அண்ணாமலை, டாஸ்மாக் ஐ முற்றுகையிடும் போராட்டத்தை தமிழ்நாடு முழுவதும் நேற்று நடத்தினார். காவல்துறையினர் அண்ணாமலை, தமிழிசை, வானதி சீனிவாசன், எச்.ராஜா, கரு நாகராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை  உள்ளிட்ட பாஜகவினர் 106 பேர் மீது நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர்.டாஸ்மாக் முறைகேடு  போராட்டம் நடத்த முயன்று கைதான பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web