சொத்து தகராறு.. பெற்ற தாயை குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன்.. குமரியில் பகீர் சம்பவம்!

 
Kanniyakumari

குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு பகுதியை சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கிடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே ஆலங்கோடு தெற்குவிளை பகுதியைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள். 73 வயதான மூதாட்டிக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டு பின்புறத்தில் மூதாட்டி குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூத்த மகன் லாரன்ஸ், அவரிடம் சொத்து பத்திரத்தின் ஆவணங்களை கேட்டு தகராறு செய்துள்ளார். தாயார் கொடுக்க மறுத்ததால்  வாக்குவாதம் ஏற்பட்டது.

Murder

இதில் ஆத்திரம் அடைந்த லாரன்ஸ், அந்தப் பகுதியில் தோண்டி போடப்பட்டிருந்த கழிவறை குழியில் தாயாரை  பிடித்து தள்ளிவிட்டு சொத்து ஆவணத்தை கேட்டுள்ளார். பின்னர் அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து தாயாருக்கு மிரட்டல் விடுத்து சென்றார். ஒரு கட்டத்தில் வள்ளியம்மா குழியிலிருந்து மேலே ஏற முயற்சி செய்தார்

மேலும் மகனின் தாக்குதலில் காயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மகன், தாய் தகராறு சம்பவத்தை இளைய மருமகள் தட்டிக்கேட்டதோடு அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


பெற்ற தாயை தாக்கி குழிக்குள் தள்ளி கொல்ல முயன்ற மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web