அதிமுக ஆட்சியின் டாஸ்மாக் ஊழல் மீது விசாரணயா? நயினார் நாகேந்திரன் பதில் என்ன?

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு அமித்ஷா அறிவித்து இருந்தாலும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் இந்தக் கூட்டணிக்கு வரவேற்பு இல்லை. நம்ம தொகுதிகளில் மட்டும் கவனம் செய்வோம் என்ற எண்ணமே அதிமுக தொண்டர்கள் மத்தியில் மேலோங்கி இருப்பதாகத் தெரிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய், பாஜக தயவில் ஆட்சியைப் பிடித்து கட்சியை இழக்கனுமா? அல்லது தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை பாஜகவிடமிருந்து கட்சியை காப்பாற்றுவது தான் முக்கியம் என்று எம்ஜிஆர்-ஜெயலலிதா காலத்துத் தொண்டர்கள் விரும்புவதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனின் செய்தியாளர் சந்திப்பு அதிமுக தொண்டர்களை கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.
“அதிமுக ஆட்சியில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழல் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத் துறை ரெய்டு நடத்துவீர்களா?” என்று செய்தியாளர் நயினார் நாகேந்திரனிடம் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், என்னைப் பொறுத்தவரை யார் ஆட்சி என்றாலும் இ.டி(அமலாக்கத்துறை) ரெய்டு கண்டுப்பாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.
திமுகவினரும் நயினார் நாகேந்திரனின் செய்தியாளர் சந்திப்பை மீம்ஸ் ஆக்கி சமூகத்தளத்தில் பரப்பி வருகிறார்கள்.