கோர விபத்தில் சிக்கிய தனியார் பேருந்து... கல்லூரி மாணவர் பலி.. 30 பேர் காயம்!

 
Ariyalur Ariyalur

அரியலூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்தில் கல்லூரி மாணவன்‌ உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இருந்து துறையூர் செல்வதற்கு தனியார் பேருந்து இன்று காலை புறப்பட்டது. பேருந்து செந்துறை வழியாக ராயபுரம் என்ற இடத்தில் செல்லும் போது சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது.

Ariyalur

இதனால் பேருந்தில் பயணம் செய்தோர் 52  பேர் காயமடைந்தனர். காலை நேரத்தில் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அதிகமாக பயணம் செல்லும் சூழ்நிலையில் பேருந்து விபத்து என்று கேள்விப்பட்டவுடன் இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து பேருந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் பொதுமக்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்பு பணியை மேற்கொண்டனர். இதில் கார்த்திக் என்ற கல்லூரி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 52 பேர் காயங்களுடன் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.  

Accident

மேலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதில் காயமடைந்த 34 பேர் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமணையிலும், 18 பேர் செந்துறை மருத்துவமணையிலும்‌ சிகிச்சை, இதில் ஒருவர்‌ உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மணைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

From around the web