முதல்வர் மருந்தகம்! 1000 இடங்களில் திறப்பு!!

தமிழ்நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை செய்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்
பிப்ரவரி 24ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்க உள்ளார். மக்களைத் தேடி மருத்துவம், நம்மைக் காக்கும் 48 உள்பட மருத்துவத்துறையில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை தற்போது திறந்து வைக்கிறார்.
மருந்துகள் விற்பனையில் அதிகபட்ச லாபம் இருப்பதால் பொதுமக்களுக்கு கூடுதல் விலைச் சுமை ஏற்படுகிறது. இதைக் குறைக்கும் வகையில் விலைக்குறைப்பு செய்து முதல்வர் மருந்தகங்களில் விற்க்கப்படும். தொடர்ச்சியாக மருந்து மாத்திரை தேவைப்படுபவர்களுக்க்கு இந்தத் திட்டம் மூலம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.