மின்சாரம் தாக்கி கர்ப்பிணி பெண் பலி! நள்ளிரவில் நடந்த சோகம்!!

 
MKB Nagar
சென்னையில் மின்சாரம் தாக்கி 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.கே.பி நகர் 16,வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் சந்தோஷ்குமார். சரக்கு வாகன ஓட்டுநரான இவரது மனைவி இந்துமதி (25). நிறை மாத கர்ப்பிணியான இவர் தலை பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்துள்ளார். 
shock
இந்த நிலையில் நேற்று வீட்டில் தண்ணீர் இல்லாததால் மின் மோட்டார் சுவிட்சினை போட சென்றுள்ளார். மின் மோட்டார் சுவிட்சை இந்துமதி தொட்டு இயக்கிய நிலையில் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதனால் சம்பவ இடத்திலேயே இந்துமதி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.
உடனடியாக இந்துமதியை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அங்கு இந்துமதியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 
MKB Nagar
தகவல் அறிந்து வந்த எம்.கே.பி நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி 9 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web