8 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை.. கள்ளக்குறிச்சி அருகே சோகம்!

 
Kallakurichi

கள்ளக்குறிச்சி அருகே கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த வெற்றிச்செல்வன். இவருக்கும், ஆரோக்கிய ஷர்மிளா என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. கல்யாண உறவில் சிறு சிறு பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது.

suicide

ஆரோக்கிய ஷர்மிளா 8 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது தாய் வீடான ராயபுரம் கிராமத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், ஆரோக்கிய ஷர்மிளா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Police

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கர்ப்பிணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாச்சியர் விசாரணை செய்து  வருகிறூர்.

From around the web