பிரசாந்த் கிஷோர் சந்திப்பு! என்ன முடிவு செய்யப் போகிறார் விஜய்!!

தவெகவில் தேர்தல் வியூகத்தை கவனித்துக்கொள்ள ஜான் ஆரோக்கியசாமி இருந்து வரும் நிலையில், மற்றொரு தேர்தல் வியூக அமைப்பாளரான ஆதவ் அர்ஜுனா இணைந்தார். தற்போது மூன்றாவது நிபுணராக பிரசாந்த் கிஷோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுகவுக்கு பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் தேர்தல் வேலை பார்க்கும் என்று கூறப்படும் நிலையில் பிரசாந்த் கிஷோர் - விஜய் சந்திப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த சந்திப்பில் 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் விஜய் கட்சிக்கு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் சொன்னதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 20 சதவீத வாக்குகளுடன் கம்யூனிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் வந்தால் ஆளுங்கட்சியாக இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிடலாம் என்பது விஜய் யின் பார்வையாக இருக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கை அவ்வளவு எளிதாக உடைத்து மற்றொரு கட்சி ஆட்சியைப் பிடித்து விடமுடியாது என்ற எதார்த்தத்தை உணர்ந்துள்ளதால், அதிமுகவுடன் சேர்ந்து ஏன் கரைந்து போகவேண்டும்? முதல் தேர்தலிலேயே முழு பலத்தையும் காட்டி எதிர்க்கட்சியாக இடம்பிடித்து விட்டால் 2031ல் ஆட்சியை பிடித்து விடலாம் என்பது விஜய் யின் திட்டமாக இருக்கிறதாம். அதிமுகவில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை என்பதால் 2031ல் அந்தக் கட்சியை தவெக தலைமையிலான கூட்டணியில் இணைப்பதுவும் இலகுவானதாக இருக்கும் என்றும் விஜய்க்கு சொல்லப்படுகிறதாம்.
அதிமுகவை வலுவிலக்கச் செய்து அந்த இடத்தில் பாஜக வளரும் முயற்சி வெற்றி பெறவில்லை என்பதால் அதையே தவெக செய்யலாமே என்பது தான் விஜய் யின் திட்டமாகவும் இருக்கிறதாம். ஆக, அதிமுக கூட்டணியில் சேரும் எண்ணம் என்பது விஜய்க்கு இல்லை என்றே தெரிகிறது.
அதிமுக உட்கட்சி குழப்பங்கள் வேறு எடப்பாடி பழனிசாமிக்கு தலைவலியாக வெடித்துள்ள நிலையில் விஜய் யும் வராவிட்டால்?