ட்ரெண்டிங் யுத்தத்தைத் தொடர்ந்து சுவரொட்டிப் போர்?

 
poster war poster war

நேற்றைக்கு முந்தைய நாள் தன்னெழுச்சியாக சமூகத்தளங்களில் கெட் அவுட் மோடி என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது. இதில் திமுக தலைவர்களோ, அமைச்சர்களோ முக்கிய நிர்வாகிகளோ பங்கேற்கவில்லை. ஆனால் இதை பெரும் கவுரமாக எடுத்துக் கொண்ட பாஜக தலைவர் அண்ணாமலை கெட் அவுட் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக்கை பகிர்ந்து ட்ரெண்ட் செய்ய வைத்தார். இந்த ஹேஷ்டேக்கும் இந்திய அளவிலும் உலக அளவிலும் பிரபலமானது.

நேற்று உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் தமிழ் வாழ்க என்ற வாசகத்துடனும் இந்தி என்று எழுதி அழிக்கப்பட்ட வாசகத்துடனும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.  அதிலும் மோடி முகத்தில் கையை வைத்துக் கொண்டு யோசனையில் இருப்பது போல் உள்ள போஸ்டர் அருகே ஒட்டப்பட்ட தமிழ் வாழ்க போஸ்டர் இணையத்தளத்தில் வைரலும் ஆனது. இந்த தமிழ் வாழ்க போஸ்டர்களை யார் ஒட்டியது என்ற விவரம் எழுதப்படவில்லை. ஆளுங்கட்சியினரின் செயல் தான் என்று பரவலாக யூகிக்கப்படுகிறது.

இன்று அண்ணாமலை தரப்பில் அமைச்சர் மகன் ஃப்ரெஞ்ச் படிக்கலாம் எங்கள் குழந்தைகள் மும்மொழி படிக்கக்கூடாதா என்ற கேள்வியுடன் பாஜக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு இருப்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கும் வகையில் இந்த போஸ்டர் வாசகம் உள்ளது. ஆனால் பாஜக தலைவர்கள் படம் இருப்பதால் இது பாஜக பிரச்சாரம் என்று பளிச்சென தெரிந்து விடுகிறது.

ட்ரெண்டிங், போஸ்டர் யுத்தத்தைத் தொடர்ந்து அடுத்து என்ன அரசியல் யுத்தம் வரப்போகிறதோ தெரியவில்லைல்

From around the web