மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி.. திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

 
Ponmudi

உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.

தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு தலா ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

Ponmudi

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடியை குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோவிலூர் தொகுதிக்கு முதலில் அறிவிக்கப்பட்ட இதைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது.

Ponmudi

அதன்படி, இன்று நாளை காலை அமைச்சராக பதவியேற்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ஒரு அமைச்சர் தகுதிநீக்கம் செய்யப்பட்டு ஒருசில நாள்களில் மீண்டும் அமைச்சராக பதவியேற்பது தமிழ்நாடு அரசியலில் முதல்முறையாக நடக்கிறது.

From around the web