ரூ.1,000 ரெக்கப்பணத்துடன் பொங்கல் தொகுப்பு.. நாளை முதல் டோக்கன் வினியோகம் 

 
Pongal

ரூ. 1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. 

Pongal

அந்த வகையில் இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்வதற்கான டோக்கன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கன் ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது.

pongal-gift

இந்நிலையில், ரூ. 1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web