10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு வினியோகம்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 
pongal pongal

ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வரும் 10-ம் தேதி முதல் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.

Pongal

இந்த நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற பொருட்கள் அடங்கிய தொகுப்புடன் ரூ. 1,000 ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். அதன்படி 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில், ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

Pongal

இந்த நிலையில், வரும் 10-ம் தேதி முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பானது வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி 9-ம் தேதி வரை டோக்கன்கள் வினியோகிக்கப்படும். இதன் பின்னர் 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை மக்கள் ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 13-ம் தேதிக்குள் பெற முடியாதவர்கள் 14-ம் தேதியன்று பெற்றுக்கொள்ளலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web