பொங்கல் பரிசுத் தொகுப்பு.. தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

 
pongal

பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது. இந்த நிலையில் வரும் 2024 பொங்கல் பண்டிகைக்கும் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது, “தைப்பொங்கல் 2024-ம் ஆண்டு குடும்ப அட்டைதத்தாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்க உத்தரவிடப்பட்டு்ள்ளது.

Pongal

2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் வகையில் இரு நூற்று முப்பத்து எட்டு கோடியே தொண்ணூற்று இரண்டு லட்சத்து எழுபத்து இரண்டாயிருத்து எழுநூற்று நாற்பத்து ஒன்று (ரூ.238, 92, 72,741) செலவினம் ஏற்படும்.  

கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சரிசி, கரும்பு, சர்க்கரை ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அரிசி பெறும் அட்டைத்தாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். கரும்பு ஒன்றுக்கு ரூ.33 கொள்முதல் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.  

pongal-gift

கடந்த ஆண்டு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட நேரத்தில் ரூ.1,000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரொக்கப்பரிசு அறிவிப்பு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொங்கல் தொகுப்பு எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

From around the web