பொங்கல் பரிசு!! நெல்லைக்கு இரட்டிப்பான ரயில் பெட்டிகள்!
சென்னை - திருநெல்வேலி க்கு இடையே இயங்கும் வந்தே பாரத் ரயிலின் பெட்டிகள் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இது வரையிலும் 8 பெட்டிகளுடன் இயங்கி வந்த ரயில் இப்போது 16 பெட்டிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரண்டு மடங்கு பயணிகள் ஒரே நேரத்தில் செல்ல முடியும்.
பொங்கல் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ள நிலையில், ரெகுலராக சென்று வரும் தினசரி ரயிலின் பெட்டிகளை இரட்டிப்பாக்கி உள்ளது பயணிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்களுக்கு இருக்கை உறுதியாகிவிடும்.
நெல்லையில் காலை 6:05 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் சென்னை எழும்பூருக்கு மதியம் 1:55 மணிக்கு வந்து சேரும். மறுமார்க்கத்தில் மதியம் 2:45 க்கு புறப்பட்டு இரவு 10:30 மணிக்கு நெல்லையை சென்றடையும். வழியில் தாம்பரம். விழுப்புரம். திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் மட்டுமே இந்த ரயில் நிற்கும்.