பொங்கல் விழா! முருகன் பாடலை தாளம் தட்டி ரசித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

 
CM Stalin

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருடைய துணைவியார் துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டார். விழாவில் சிறுமி ஒருவரின் சிறப்பு இசைக்கச்சேரி இடம்பெற்றது. 

முத்தமிழில் பாட வந்தேன் முருகனையே வணங்கி நின்றேன் என்று சிறுமி பாடத் தொடங்கியதும் நாற்காலியின் வலது பக்கம்  வைத்திருந்த முதலமைச்சரின் வலது கை தாளம் போடத் தொடங்கிவிட்டது. முத்தமிழ் என்றதும் அந்த இசைக்கும் குரலுக்கும் முதலமைச்சரின் உள்ளம் தன்னையறியாமலே தாளம் போட்டது தான் கைகளில் வெளிப்பட்டதோ என்று தோன்ற வைத்தது.

CM Stalin

அடுத்ததாக குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலை பாடிய போது, இரு கைகளையும் வணங்கியபடி வைத்திருந்த முதல்வரின் கரங்கள் தன்னிச்சையாகவே ஒன்றுக்கொன்று தட்டிக் கொண்டு தாளமிசைக்கத் தொடங்கிவிட்டது.

சிறுமியின் திறமையும் குரல்வளமும் முதலமைச்சருக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்தது என்றே தெரிகிறது. தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர், ஒவ்வொரு தடவை கொளத்தூருக்கு வரும் போதும் எனக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கொளத்தூரையும் என்னையும் பிரிக்க முடியாது. ஸ்டாலின் என்று பெயர் வைத்த முத்தமிழறிஞர் கலைஞர் என்னை உழைப்பு உழைப்பு என்று பெயர் சூட்டியும் மகிழ்ந்தார். அவர் சொன்னது போல் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடு மக்களுக்காகவும் நம்ம கொளத்தூர் மக்களுக்காகவும் உழைத்துக் கொண்டே இருப்பேன் என்று பேசினார்.

விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டார். பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

From around the web