முதலமைச்சர் வீட்டில் பொங்கல் கொண்டாட்டம்!! வண்ண விளக்குகளில் ஜொலிக்கும் வீடு!!

தமிழர்களுக்கான திருநாள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் விழாவை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்ற கொள்கை உடையவர். தமிழர் திருநாள் கொண்டாட்டமாக சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் கொளத்தூரில் பொங்கல் விழா நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பொதுமக்களுடன் பங்கேற்று கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சரின் வீட்டிலும் பொங்கல் விழா சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சரின் வீடு வண்ண விளக்குகளாலும் கரும்பு, வாழை உள்ளிட்ட தோரணங்களாலும் ஜொலித்துக் கொண்டிருக்கிறது.
நாளை காலை தன்னுடைய வீட்டில் மகன் உதயநிதி ஸ்டாலின் குடும்பம் மற்றும் மகள் செந்தாமரை குடும்பத்துடன் முதலமைச்சர் பொங்கல் கொண்டாட உள்ளார். அதையடுத்து அறிவாலயம் செல்லும் முதலமைச்சர் கட்சித் தொண்டர்களுக்கும் தலைவர்களுக்கும் பொங்கல் வாழ்த்துச் சொல்லி பரிசுப்பொருட்கள் வழங்க உள்ளார்.