சொகுசு விமானத்தில் ஃப்ரண்ட் கூட கல்யாணத்திற்கு போற அரசியல்வாதி!! சத்யராஜ் மகள் தாக்கு!!

திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ தவெக தலைவர் நடிகர் விஜய் யின் அரசியல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சத்யராஜின் மகளுமான திவ்யா சத்யராஜ், கலைஞரை கல்லூரி காலத்திலிருந்தே பிடிக்கும் கல்லூரி காலத்தில் கலைஞரின் ரசிகை என்று பெருமையாக கூறியுள்ளேன். ஒரு பெண்ணாக இன்று மேடையில் நான் பேசுவதற்கு கலைஞர் தான் காரணம். திமுகவின் வரலாறை அனைவரும் படிக்க வேண்டும்.
துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏசி கேரவனில், சொகுசு விமானத்தில் ஃப்ரண்ட் கூட ஃப்ரண்ட் கல்யாணத்திற்குப் போகும் அரசியல்வாதி கிடையாது. கடினமாக உழைக்கும் நாயகன், மழை வெள்ளம் வந்தால் நமக்காக களத்தில் இறங்கி வேலை செய்பவர். பாஜகவிடமிருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்த மாமன்னன். உதயநிதி ஸ்டாலின் யாராலும் வெல்ல முடியாத நாயகன்.
வாடகை ஆட்டோ ஓட்டும் பெண்களுக்கு சொந்த ஆட்டோ வாங்கித் தந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். விடியல் பயணம், புதுமைப் பெண் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் உண்மையான பெண்ணியவாதி என்பதை நிருபித்துள்ளார்.
அனைத்து மதங்களுக்கும் ஒரே மரியாதை தரக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். நேற்று, இன்று, நாளை நான் உயிருடன் இருக்கும் வரையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே எனது தலைவர். திராவிட மாடல் ஆட்சி தான் இந்த நாட்டையும் பெண்களையும் காக்கும் என்று திவ்யா சத்யராஜ் பேசியுள்ளார்