அரசியல் வியாபாரி? எடப்பாடி பழனிசாமிக்கு செந்தில் பாலாஜி பதிலடி!!

 
senthil balaji

அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியையும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எக்ஸ் தளத்தில் செந்தில் பாலாஜி பதிவிட்டுள்ளார்.

”தரையே தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, பதவி சுகம் கண்டவுடன் அந்த கால்களையே வாரிவிட்ட எடப்பாடி பழனிசாமி அவர்கள் அரசியல் விசுவாசம் பற்றி வகுப்பெடுக்கிறார்.. பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம்;

தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்.. புளிமூட்டையில் ஆரம்பித்து அரசியல் வரை எல்லாவற்றையும் எந்தவொரு அறமும் இன்றி வெறும் வியாபாரமாகவே பார்க்கும் வியாபாரி பழனிசாமி எப்படியான அரசியல் வியாபாரி என்பது அவரைச் சுற்றியுள்ளவர்களுக்கு மிக நன்றாக தெரியும்..

அடிமைக் கூட்டத்திற்கு லாவணி பாடாதவர்களுக்கு எல்லாம் ஏதாவதொரு முத்திரை குத்தி அவர்களைக் காலி செய்வதற்காக எந்தவொரு லாபியும் செய்யத் தயங்காத பதவி வியாபாரி பழனிசாமி மற்றவர்களைப் பார்த்து வியாபாரி என்று சொல்வதுதான் நகைமுரண்” என்று பதிவில் கூறியுள்ளார் செந்தில் பாலாஜி.


செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் என்பதும் சேகர் பாபு அதிமுக  எம்.எல்.ஏவாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web