மூச்சுத் திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் பரிதாப பலி.. சாப்பிடும் போது நிகழ்ந்த சோகம்!

 
chennai

சென்னை அருகே சாப்பிடும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் சரவணன் (51). இவர் நேற்று இரவு வழக்கம்போல் பணி முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்று உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைத அவர்து உறவினர்கள், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்னர். 

Dead Body

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏதாவது ஏற்பட்டதா, இல்லை உணவு தொண்டையில் சிக்கி சுவாசிக்க முடியாமல் மூச்சுத்திணறி இறந்து போனாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

Police

தொண்டையில் உணவு சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை அதிகம்தான். கடந்த 2018-ம் ஆண்டு புதுவையில் தெருவோரக் கடையில் இட்லி சாப்பிட்ட நபருக்கு தொண்டையில் உணவு சிக்கியதில் அவர் பலியானார். அது போல் நாகர்கோவிலில் தொண்டையில் இட்லி சிக்கி 6-ம் வகுப்பு மாணவி ஒருவர் பலியாகிவிட்டார்.

From around the web